பிரித்தானிய சம்பவத்திற்கு பிறகும் லொறிக்குள் மறைந்து பயணிக்கும் புலம்பெயர்வோர்: பிரான்சில் மற்றொரு சம்பவம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

லொறிகளுக்குள் மறைந்து புலம்பெயர்வோர் பலியாகிவரும் செய்திகள் வெளியாகிவரும் நிலையிலும், இன்னமும் அதேபோன்ற சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

நேற்று தென் பிரான்ஸ் நகரமான Niceஇல், லொறி ஒன்றை இத்தாலிய எல்லையில் தடுத்து நிறுத்தி சோதனையிட்ட பிரெஞ்சு பொலிசார், அதற்குள் 31 பேர் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

அந்த லொறியை ஓட்டி வந்த சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அந்த சாரதியும், லொறிக்குள் பதுங்கியிருந்த31 புலம்பெயர்வோரும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மூன்று பதின்ம வயதினர் உட்பட அந்த 31 பாகிஸ்தானியர்களும் புலம்பெயர்தல் விதிகளின்படி, இத்தாலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நபர்களை கடத்துவதின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக, Nice நகர் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில்தான் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 39 பேர் லொறிக்குள் மறைந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது பலியாகியுள்ள நிலையிலும், ஐரோப்பாவுக்குள் நுழைய முயலும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்