பழைய சினிமாக்களில் வருவது போல் பிரான்சில் தேவாலய கதவை உடைத்து கொள்ளையடித்த கும்பல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பழைய சினிமாக்களில் எதிரியின் கோட்டைக் கதவை தகர்ப்பதற்காக, வாகனம் ஒன்றில் பெரிய மரம் ஒன்றைக் கட்டி அதைக்கொண்டு கதவில் மோதும் காட்சிகளைக் காண முடியும்.

அதேபோல், பிரான்சில் தேவாலயம் ஒன்றின் கதவை உடைத்த கொள்ளையர்கள் சிலர், தேவாலயத்திலுள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

தென் மேற்கு பிரான்சின் Oloron-Sainte-Marie என்ற இடத்திலுள்ள தேவாலயம் ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தங்கள் காரின் மீது ஒரு பெரிய மரத்தைக் கட்டி, அதைக் கொண்டு மோதி தேவாலயக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்துள்ளனர் அந்த கொள்ளையர்கள்.

GETTY IMAGES

தேவாலயத்திலிருந்த தங்கத்தாலான பொருட்கள் உட்பட பல விலைமதிப்பில்லாத பொருட்களை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த தேவாலயத்தில், இப்படி ஒரு கொள்ளை நடப்பது இதுவே முதல்முறையாகும்.

Oloron-Sainte-Marie யுனெஸ்கோ உலகப் பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரு இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP
GETTY IMAGES

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்