பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதல்!பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்டஈட்டு பேரவை வெளியிட்ட புதிய தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக கூறி, புதிததாக 50 பேர் நஷ்டஈடு கோரிக்கையாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்ட ஈட்ட் பேரவை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் 13-ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால், 150 பேர் கொல்லப்பட்டனர். 300 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் காரணமாக 2,600 பேர் இதுவரை நஷ்ட்ட ஈட்டினை பெற்றுள்ளனர். தாக்குதல் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் மேலும் 50 பேர் புதிதாக நஷ்ட்ட ஈடு கோரியுள்ளதாக பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்டஈட்டு பேரவை தகவல் வெளியிட்டுள்ளது.

நஷ்ட்ட ஈடு கோரும் கோரிக்கையாளர்கள் நன்கு விசாரிக்கப்பட்டே, அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் காரணமாக நாங்களும் பாதிக்கப்பட்டோம் என்று சிலர் போலி நஷ்ட்ட ஈடு கோரியதால், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்