பல நாடுகளை கதிகலங்க வைத்த பயங்கரவாத குழுவின் தலைவர் தொடர்பில் பிரான்ஸ் முக்கிய அறிவிப்பு

Report Print Basu in பிரான்ஸ்

மாலி நாட்டில் மேற்கு ஆப்பிரிக்க இஸ்லாமிய தீவிரவாதக் குழுவின் தலைவரை, பிரான்ஸ் ராணுவப் படைகள் கொன்றதாக பிரான்சின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Jama'at Nusrat al-Islam wal-Muslimin (JNIM) தீவிரவாதக் குழுவின் தலைவரும், மதத் தலைவர்களில் ஒருவருமான Ali Maychou அக்டோபர் 9 அன்று மாலியில் கொல்லப்பட்டார் என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மாலியின், பிரான்ஸ் படைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையினர் மீதான தாக்குதல்களுக்கு JNIM பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Ali Maychou ஒரு மதத் தலைவர், தீவிரவாத குழுவிற்கு ஆட்சேர்ப்பு செய்பவர், பல தாக்குதல்களுக்கு வழிவகுத்தவர் மற்றும் வெறுப்பைத் தூண்டினார் என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் Florence Parly ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வைப் பொறுத்தவரை, Maychou முன்னாள் தீவிர மதகுரு ஆவார். ஐ.எஸ்-யுடன் மட்டுமின்றி அல்-கொய்தாவுடனும் தொடர்பு வைத்திருந்ததகாக ஐ.நா.வால் சர்வதேச தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

அமெரிக்காவும் Maychou-வை பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்தது மற்றும் JNIM-ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக கருதியது.

பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நாடாக திகழ்ந்த பிரான்ஸ், மாலி மற்றும் சஹேலில் உள்ள மற்ற நாடுகளுடன் சேர்ந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடி வருகிறது.

Darmpya

மாலியில் ராணுவ படை மீது வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட 53 வீரர்களில் ஒரு பிரான்ஸ் வீரரும் அடங்குவார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்