பிரான்சில் பள்ளி முன்பு நடந்த கத்தி குத்து சம்பவம்... மாணவனின் நிலை என்ன?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் பள்ளி முன்னால் வைத்து மாணவன் ஒருவர் மீது கத்தி குத்து நடந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

நேற்று Clichy-sous-Bois நகரில் இருக்கும் பள்ளி முன்னால் மாணவனை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதால், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்,

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடையில் மூன்று தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும், அந்த நபர் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை என அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் உடனடியாக கைது செய்தனர். பொலிசாரால் கைது செய்யப்பட்ட நபர் குறித்த தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன.

இரண்டு மாணவர்களுக்கு இடையே இடம்பெற்ற கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்