பிரான்சில் நடுவானில் வெடித்து சிதறிய விமான எஞ்சின்களின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஜூலை மாதம் பிரான்சில் நடுவானில் வெடித்து சிதறிய விமான எஞ்சின் ஒன்றின் பாகங்களை தன்னார்வலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஜூலை மாதம் இரண்டு Airbus A220 விமான எஞ்சின்கள் வெடித்துச் சிதறிய நிலையில், பிரான்ஸ் விசாரணை அமைப்பு ஒன்று, காடு ஒன்றில் அந்த எஞ்சின்களில் ஒன்றின் டைட்டானியத்தால் ஆன பாகத்தைக் கண்டுபிடிப்பதற்காக தன்னார்வலர்களைக் கேட்டுக்கொண்ட நிலையில், 150 பொதுமக்கள் இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் மூன்றாவது எஞ்சின் ஒன்றும் அதேபோல் வெடித்துச் சிதறியது. அதனால் விமானத்தை அவசரமாக பாரீஸுக்கு திருப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

தற்போது, வெடித்துச் சிதறிய விமானத்தின் பாகங்களை தன்னார்வலர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

தேடுதல் வேட்டையை ஏற்பாடு செய்த ட்விட்டரில் BEA என்னும் விசாரணை அமைப்பு ட்விட்டரில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், சென்ற மாதம் அமெரிக்கா நடத்திய ஒரு விசாரணையில், சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட எஞ்சின் மென்பொருள் ஒன்று, சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் தானாகவே எஞ்சினின் சில பாகங்களை மோசமான அளவில் அதிரச் செய்வதாக தெரியவந்துள்ளது.

தற்போது உடைந்து சிதறிய எஞ்சினின் பாகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அது இந்த அமெரிக்க கண்டுபிடிப்பை உறுதி செய்ய உதவலாம் என கருதப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்