பிரான்சை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்... பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எத்தனை மில்லியன் யூரோ தெரியுமா?

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் நவம்பர் மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை எவ்வளவு மில்லியன் யூரோ நஷ்டஈடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் புறநகரில் கடந்த 2015-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலினால் 130 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதையடுத்து நஷ்ட்ட ஈடு வழங்கும் பணியை பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்ட ஈட்டு பேரவைமேற்கொண்டு வருகிறது. மொத்தமாக ஒதுக்கப்பட்ட €250 மில்லியன் யூரோக்களில் இதுவரை €107 மில்லியன்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுவரை பாதிக்கப்பட்டதாக 2,659 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 806 பேர் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் எனவும், 1,267 பேர் மனநல பாதிப்படைந்தவர்கள் எனவும், 586 பேர் உடல் காயம ஏற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத குற்றவியல் நஷ்ட்ட ஈட்டு பேரவை தலைவர் Julien Rencki இது குறித்து கூறுகையில், 80 வீதமான பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட்ட ஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்