பிரான்சில் விஸ்வரூபம் எடுக்கும் ‘Me Too’ புகார்... இயக்குனரால் துன்புறுத்தலுக்கு ஆளானதாக பிரபல நடிகை குற்றச்சாட்டு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் நடிகை அடீல் ஹெய்னல், இளம் வயதில் தனது முதல் திரைப்படத்தில் பணிபுரியும் போது இயக்குனர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இப்போது 30 வயதான ஹெய்னல், பிரெஞ்சு செய்தி ஊடகமான Mediapart-க்கு அளித்த பேட்டியில், இயக்குனர் கிறிஸ்டோப் ருகியாவிடம் தான் ‘தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு’ இலக்காக இருந்ததாகக் கூறினார்

12 முதல் 15 வயதில் தனது முதல் திரைப்படமான ‘தி டெவில்ஸில்’ இருவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய போது ருகியா தவறாக நடந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆஸ்கருக்கு சமமான பிரான்சின் சீசர் விருதுகளை இரண்டு முறை வென்ற நடிகை ஹெய்னல், பொலிசில் முறையான புகார் அளிக்க மாட்டேன் என கூறினார்.

ருகியா, இளம் வயதினருடன் ஒரு புதிய திரைப்படத்தை எடுக்க திட்டமிடுகிறார் என்பதை அறிந்ததும், தனக்கு நேர்ந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்கள் மீது பிரான்ஸ் நீதித்துறை அமைப்பு கடுமையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று ஹெய்னல் குற்றம் சாட்டினார்.

dailymail

54 வயதான ருகியா, தான் எந்தவொரு தவறான செயலையும் செய்யவில்லை என திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரான்சின் இயக்குனருக்கான சங்கம், நடிகைக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளது மற்றும் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் தனது ‘பாராட்டையும் ஆதரவையும்’ வெளிப்படுத்தியுள்ளது. மேலும், சங்கத்திலிருந்து ருகியாவையும் வெளியேற்றியுள்ளது.

ஹெய்னல் பிரான்ஸ் நீதித்துறை அமைப்பை இழிவுபடுத்துவது தவறு என்றும், புகார் அளிக்கும்படி அந்நாட்டு நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet வலியுறுத்தியுள்ளார்.

பாரிஸ் வழக்கறிஞர் அலுவலகம், 15 வயதுக்குட்பட்ட சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்