பெண்களின் பானத்தில் மருந்தைக் கலந்த அதிகாரி: வெளியான மோசமான பின்னணி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் கலாச்சார அமைச்சகத்தில் மூத்த மேலாளர் பொறுப்பு வகித்த ஒருவர், பெண்களின் பானத்தில் சிறுநீரை அதிகரிக்கும் மருந்து ஒன்றை கலந்துள்ளது தெரியவந்துள்ளது.

10 ஆண்டுகளாக தன்னிடம் நேர்முகத்தேர்வுக்கு வந்தவர்கள், சக ஊழியர்கள் என சுமார் 200 பெண்களுக்கு, அவர்களுக்கு கொடுத்த பானத்தில் சிறுநீரை அதிகரிக்கும் மருந்து ஒன்றை கலந்துள்ளார் கிறிஸ்டியன் என்னும் ஒரு மேலாளர்.

அவர்கள் தன் முன் நிற்கும்போது அடக்க முடியாமல் சிறுநீர் கழித்துவிடுவதை பார்ப்பதிலும், நனைந்த அவர்களது கால்களை புகைப்படம் எடுப்பதிலும் அவருக்கு ஒரு இன்பம்.

அதிகாரி முன் நின்று, அடக்க முடியாமல் சிறுநீர் கழித்து அவமானத்தில் குறுகிப்போனதாக பல பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

2018ஆம் ஆண்டு, ஒரு கலந்தாய்வின்போது ரகசியமாக அவர் ஒரு பெண்ணை புகைப்படம் எடுத்ததை, கிறிஸ்டியனின் சக ஊழியர் ஒருவர் கண்டுபிடித்ததையடுத்து இந்த விடயம் வெளியில் வந்தது.

அவர் அரசு வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவர் மீது விசாரணை ஒன்றை பிரெஞ்சு விசாரணை அதிகாரிகள் துவக்கியுள்ளனர்.

அவர் மீது, தீங்கு தரும் பொருளை பானத்தில் கலந்தது, பதவியை பயன்படுத்தி ஒருவரை பாலியல் ரீதியில் தாக்கியது, புகைப்படம் எடுப்பதன் மூலம் ஒருவரது அந்தரங்கத்தில் நுழைவது உட்பட ஏராளம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில், அது தன்னால் கட்டுப்படுத்த முடியாத ஒரு பிரச்னை என்றும், அதற்காக தான் மன நல சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார் கிறிஸ்டியன்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்