நிம்மதியாக சிறுநீர் கழிக்க விடுங்கள்: பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் வைத்துள்ள மசோதா!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெஞ்சு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நிம்மதியாக சிறுநீர் கழிக்க விடக் கோரி மசோதா ஒன்றை முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த வாரம், (நவம்பர் 6 அன்று) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், நிம்மதியாக சிறுநீர் கழிக்க விடக் கோரி மசோதா ஒன்றை முவைத்துள்ளார்கள், அதாவது, கழிவறைகளிலும் பொது இடங்களிலும் டிஜிட்டல் விளம்பரங்களை தடை செய்யக் கோரியுள்ளார்கள்.

அவர்களில் Clémentine Autain, Mathilde Panot மற்றும் Philippe Gosselin ஆகியோரும் அடங்குவர்.

அந்த மசோதாவில் இவ்விதம் குறிப்பிடப்பட்டுள்ளது, பாரீஸிலுள்ள காபி ஷாப் ஒன்றில் கழிவறைக்கு சென்றுகொண்டிருந்தேன், அப்போது, என் கண்களுக்கு முன், 20 சென்றிமீற்றர் தூரத்தில், சிறுநீர் கழிக்கும் இடத்துக்கு மேல், ஒரு திரை இருக்கிறது, அதில் விளம்பரம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

பளபளப்பாய் வண்ணமயமாக கண்ணுக்கு முன் ஓடிக்கொண்டிருக்கும் அந்த விளம்பரத்தை கண்ணை மூடாவிட்டால் தவிர்க்கமுடியாது.

சிறுநீர் கழிக்குமிடத்தில் கூட, நமது மூளையை சுதந்திரமாக இருக்க விடமாட்டேன்கிறார்கள் என்கிறது.

அன்றாட வாழ்வில் இத்தகைய டிஜிட்டல் விளம்பரங்கள் நுழைவதை எதிர்க்கிறது இந்த மசோதா.

மசோதா பரிசீலனைக்காக சமூக விவகாரங்கள் கமிஷனுக்கு அனுப்பப்பட உள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்