பிரெஞ்சு மொழி தெரியவில்லை என்று கூறி வெளிநாட்டில் நிராகரிக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டுப்பெண்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
576Shares

பிரான்ஸ் நாட்டுப்பெண் ஒருவருக்கு பிரெஞ்சு மொழி போதுமான அளவு தெரியவில்லை என்று கூறி வெளிநாட்டில் வாழிட உரிமம் மறுக்கப்பட்ட செய்தி பிரான்சில் கவனம் ஈர்த்துள்ளது.

கியூபெக்கில் நிரந்தர வாழிட உரிமம் கோரி விண்ணப்பித்தார் பிரென்சு பெண்ணான Emilie Dubois (31).

ஆனால் அவரது பிரெஞ்சு மொழி போதுமான அளவு நன்றாக இல்லை என்று கூறி, அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2012 முதல் பிரெஞ்சு மொழி அதிகம் பேசும் கியூபெக்கில் வாழ்ந்து வரும் Emilie, கியூபெக்கிலுள்ள Laval பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றுள்ளதும், மொழித்தேர்வில் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் இதெல்லாம் நிரந்தர வாழிட உரிமம் பெறுவதற்கு போதாதென்று கூறிவிட்டார்கள் கியூபெக் அதிகாரிகள். வேடிக்கையாக இருக்கிறது என்கிறார் Emilie.

THE CANADIAN PRESS/Jacques Boissinot

கியூபெக் புலம்பெயர்தல் துறை அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், அவரது ஆய்வுக்கட்டுரை முழுவதும் பிரெஞ்சு மொழியில் இல்லாததாலேயே அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனது ஆய்வுக்கட்டுரையில் ஒரு அதிகாரம் மட்டும் ஆங்கிலத்தில் இருப்பதாகவும், அது ஒரு அறிவியல் சஞ்சிகையிலிருந்து (journal) எடுக்கப்பட்டதால்தான் அதை அப்படியே இணைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் Emilie.

அதைத்தவிர மற்ற எல்லாவற்றையும் தான் பிரெஞ்சு மொழியில்தான் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Emilie.

தங்கள் நாட்டுப்பெண் ஒருவருக்கு பிரெஞ்சு மொழி போதுமான அளவு தெரியவில்லை என்று கூறி, அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டுள்ள விவகாரம் பிரான்சில் அதிக அளவில் மக்களின் கவனம் ஈர்த்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்