பிரான்சில் காணமல் போன மகன்... சடலமாக மீட்கப்பட்ட தந்தை! அடுத்த சில மணி நேரங்களில் பொலிசார் கண்ட காட்சி

Report Print Santhan in பிரான்ஸ்
1231Shares

பிரான்சில் மகன் காணமல் போய்விட்டதாக தந்தை புகார் கொடுத்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் Somme நகரத்தை சேர்ந்த தந்தை தன்னுடைய 7 வயது மகனை காணவில்லை என்று சனிக் கிழமை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுவனை பொலிசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் புகார் கொடுத்த அடுத்த நாள் ஞாயிற்று கிழமை தந்தை வீட்டில் இருந்து சுமார் 10 கி.மீற்றர் தொலைவில் உள்ள மின் கம்பத்தில் கயிறை பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பொலிசார் அவரை உடலை மீட்ட அடுத்த சில மணி நேரங்களில், Friville-Escarbotin (Somme), நகரில் வைத்து காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஏழு வயது மகனின் சடலம் மீட்கப்பட்டது.

குறித்த நகரம் Nancy (Moselle) நகரின் எல்லைப்பிரதேசம் எனவும், சிறுவனின் வீட்டில் இருந்து 400 கி.மீற்றர் தொலைவில் அந்நகரம் உள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்