கேக் தயாரிக்கும் போது இயந்திரத்தில் சிக்கிய தாவணி: மகன் கண்முன்னே துடிதுடித்து இறந்த தாய்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

கேக் தயாரிக்கும் போது இயந்திரத்தில் தாவணி சிக்கியதால் மகனின் கண்முன்னே தாய் ஒருவர் துடிதுடித்து இறந்துள்ளார்.

கிழக்கு மத்திய பிரான்சில் ஆவெர்க்னே-ரோன்ஸ்-ஆல்ப்ஸ் பிராந்தியத்தை சேர்ந்த பெயர் குறிப்பிடப்படாத 58 வயதான பெண், ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் தனது வீட்டில் இறந்து கிடந்தார்.

அவர் அணிந்திருந்த தாவணி தனது 15 வயது மகனுடன் கேக் தயாரிக்கும் போது உணவு கலவையில் சிக்கிக்கொண்டதாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

'பீதி அடைந்ததாக' கூறப்படும் அந்த சிறுவன், உடனடியாக அவசரகால சேவைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளான். எதிரில் பேசிய அதிகாரி, சாதனத்தின் சுவிட்சை OFF செய்துவிட்டு தாயின் தாவணியை வெட்டும்படி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்பிறகு வீட்டிற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் குழுவினர் பாதிக்கப்பட்ட பெண்ணை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயும் மகனும் சமையலறையில் கேக் தயாரிக்கும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சாதனத்தின் உருவாக்கம் மற்றும் மாதிரி தெளிவாக இல்லை.

இந்த சம்பவத்தின் ஒரே சாட்சியான, பாதிக்கப்பட்டவரின் மகன், என்ன நடந்தது என்பதை பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளான்.

இருந்தாலும், மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் பிரேத பரிசோதனை நடத்த உள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்