பிரான்சில் பருவ காலத்தில் முன்னதாகவே பனிப்பொழிவு ஆரம்பம்...மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!

Report Print Kavitha in பிரான்ஸ்

பிரான்சில் வழக்கத்தை விட பருவ காலத்தில் முன்னதாக பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இன்று மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை நேற்று Météo-France வெளியிட்டுள்ளது.

20 cm இல் இருந்து 50 cm வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் Isère, Drôme மற்றும் Ain ஆகிய மாவட்டங்களில் பலத்த பனிப்பொழிவு இடம்பெறும் எனவும் இன்று நண்பகல் 12 மணியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை செம்மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகின்றது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்