பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள்... 147 பேர் கைது

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாளில் ஏராளமானோர் நாட்டின் பல நகரங்களில் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஒரு வருட நிறைவு நாள் நேற்று சனிக்கிழமை தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரிசில் 4,700 பேர் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு, நாடு முழுவதும் 28,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிலான போராளிகள் கலந்துகொண்ட இறுதி போராட்டம் இந்த ஆண்டின் மார்ச் 9 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணி வரை பாரிசில் 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இது தவிர இன்று நாட்டின் பல இடங்களில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்