6 மாத கர்ப்பிணியை கடித்து குதறிய நாய்கள்: காட்டுப்பகுதியில் சடலத்தை பார்த்து துடிதுடித்த கணவன்

Report Print Vijay Amburore in பிரான்ஸ்

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்ற ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ள சோக சம்பவம் பிரான்ஸ் நாட்டில் அரங்கேறியுள்ளது.

பாரிஸின் வடக்கே உள்ள ரெட்ஸ் வனப்பகுதியில் எலிசா பிலாஸ்கி (29) என்கிற 6 மாத கர்ப்பிணி பெண், சனிக்கிழமையன்று தன்னுடைய நாயுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார்.

அப்போது சில நாய்கள் அவரை தாக்க முற்பட்டதால் வேகமாக கணவருக்கு போன் செய்துள்ளார். விமான நிலையத்தில் வேலை செய்துகொண்டிருந்த அவர் 45 நிமிடங்கள் கழித்து, சம்பவ இடத்தை அடைந்துள்ளார்.

நாய்கள் கடித்து குதறிய நிலையில் சடலமாக மனைவி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், எலிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

திங்களன்று மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், மதியம் 1 மணி முதல் பிற்பகல் 1.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நாய்கள் சில தாக்கியுள்ளன.

பெரும்பாலும் அவருடைய தலைப்பகுதியில் நாய்கள் கடித்துள்ளன. உயிருடன் இருந்த போது சில நாய்கள் மட்டுமே கடித்துள்ளன. இறந்த பின்னர் தான் அதிகமான நாய்கள் கடித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர் நடந்து சென்ற போது சொந்த நாய் தாக்கியதா அல்லது காட்டில் சுற்றித்திரியும் நாய்கள் தாக்கியதா என்பதை கண்டறிய டி.என்.ஏ மாதிரிகளை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்