காட்டில் உயிரிழந்து கிடந்த கர்ப்பிணிப்பெண்: தொலைபேசியில் அவர் கடைசியாக அளித்த அதிர்ச்சி தகவல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில், காட்டில் உயிரிழந்து கிடந்த ஒரு பெண், தான் உயிரிழப்பதற்கு முன் தன் கணவருக்கு தொலைபேசியில் அழைத்து கூறிய செய்தியால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியவந்துள்ளது.

வட பிரான்சைச் சேர்ந்த அந்த பெண், தனது நாய்களை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்கு சென்றுள்ளார்.

அப்போது தனது கணவரை தொலைபேசியில் அழைத்த அந்த கர்ப்பிணிப்பெண், தன்னை ஒரு

கூட்டம் வேட்டை நாய்கள் தாக்க வருவதாக திகிலுடன் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு சென்ற அந்த பெண்ணின் கணவர், அங்கு தன் மனைவி இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் ஆடிப்போயிருக்கிறார்.

ELISA PILARSKI/FACEBOOK

உடனடியாக பொலிசார் வரவழைக்கப்பட, அவர்கள் உடலைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

உடற்கூறு பரிசோதனையில், அவரது கைகள், கால்கள், உடல் மற்றும் தலையில் நாய்கள் கடித்ததால் அவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

அப்பகுதியில் வேட்டை நாய்கள் மான் வேட்டையில் ஈடுபடுவதுண்டு என உள்ளூர் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

உடனடியாக அப்பகுதியில் வேட்டையாடுவதை நிறுத்துமாறு விலங்குகள் நல அமைப்பு ஒன்று கேட்டுக்கொண்டுள்ளது.

ELISA PILARSKI/FACEBOOK

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்