வாத்துகள் கத்துவதற்கு தடை கோரிய வழக்கில்... பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் வாத்துகள் சத்தமிடுவது தொந்தரவாக இருப்பதாக அண்டை வீட்டார் தொடுத்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

பிரான்சில் இதே போன்ற வழக்கில் சிக்கி Maurice என்ற சேவல் பிரபலமானதை அடுத்து தற்போது தென்மேற்கு லேண்டஸ் பிராந்தியத்தில் வாத்துகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டாக்ஸ் நகரத்தில் வசித்து வருபவர் 67 வயதான Dominique Douthe, இவருக்கு சொந்தமான தோட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட வாத்துகள் வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், Dominique Douthe வீட்டிற்கு அருகே உள்ள சொத்தை வாங்கிய தம்பதியினர், கடந்த ஆண்டு வாத்துகள் மோசமாக சத்தம் எழுப்புவதாகவும், அது தொந்தரவாக இருப்பதாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் குறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வாத்துகள் தொடர்ந்து சத்தமிடுவதில் எந்த ஆட்சோபனையும் இல்லை என தீர்ப்பளித்தது. மேலும், குறைந்தபட்சம் சத்தம் அளவை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் நிம்மதியடைந்துள்ளதாக வாத்துகளின் உரிமையாளர் Douthe தெரிவித்துள்ளார்.

AFP

இதில் எந்தவிதமான சட்டவிரோத அல்லது அசாதாரண சிக்கல்களுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று Douthe வழக்கறிஞர் பிலிப் லாலன்னே கூறினார். அடுத்த ஆண்டு, முதல் காலாண்டில் மேற்கொள்ளப்படும் சத்தம் அளவை சோதிக்க ஒலி தணிக்கைக்கு நீதிபதி உத்தரவிட்டதாக கூறினார்.

இந்த தணிக்கை மூலம் நீதிபதி எங்களுக்கு, புகார் அளித்தவர்களுடன் ஒன்றுகூடி விவாதிக்க மற்றும் இணக்கமான தீர்வைக் காண வாய்ப்பு அளித்துள்ளார் என்று பிலிப் லாலன்னே கூறினார்.

புகார் அளித்த தம்பதியினர், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கோரிக்கைகளை பலமுறை புறக்கணித்துள்ளன என்று வலியுறுத்திய அவர்கள், ஒவ்வொரு நாளும் சத்தம் தொடருவதற்காக 150 யூரோ கோரியதுடன், 3,500 யூரோ சேதத்திற்கும், 2,000 யூரோ சட்ட செலவவிற்கும் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்