இரவு விடுதிக்கு நடனமாட வந்த நிறைமாத கர்ப்பிணி: விடுதியை பிரசவ மருத்துவமனையாக்கிய ஊழியர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

நிறைமாத கர்ப்பிணி ஒருவர் இரவு விடுதி ஒன்றிற்கு ரிலாக்ஸ் செய்வதற்காக வந்திருந்த நேரத்தில் எதிர்பாராமல் பிரசவ வலி ஏற்பட, இரவு விடுதியை பிரசவ மருத்துவமனையாக்கினார்கள் விடுதி ஊழியர்கள்.

19 வயது இளம்பெண் ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையிலும், தனிப்பட்ட பிரச்னைகள் இருந்ததால், நடனம் ஆடி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ளலாம் என அவரை Toulouseஇலுள்ள இரவு விடுதி ஒன்றிற்கு அழைத்திருந்தார் அவரது நண்பர். அங்கு வந்திருந்த நேரத்தில் சரியாக அந்த பெண்ணுக்கு நடனமாடும் இடத்தில் வைத்தே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதைக்கண்ட ஆண் ஊழியர்கள் உடனடியாக தங்கள் பெண் மேலாளரான Marie Hélèneஐ அழைக்க, அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்ப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளார் அவர்.

ஒருபக்கம் மருத்துவர்களை தொலைபேசியில் அழைத்து ஆலோசனைகள் கேட்டு அதன்படி நடக்க, அந்த இளம்பெண்ணும் பயப்படாமல் ஒத்துழைக்க, நல்லபடியாக பிரசவம் பார்க்கப்பட்டது அவருக்கு.

அந்த பெண், அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுக்க, சுற்றி நின்ற எல்லோரும் கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.

வளர்ந்து அந்த குழந்தை எங்கள் விடுதிக்கு வந்தால் வாழ்நாள் முழுவதும் அதற்கு இலவச சேவை செய்ய தயாராக இருக்கிறோம் என்கிறார் Marie-Hélène.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்