பிரான்சில் இங்கு வீடில்லாமல் தெருவில் தவிக்கும் சிறுவர்கள்... எச்சரிக்கும் தொண்டு நிறுவனம்

Report Print Santhan in பிரான்ஸ்

பிரான்சில் இல்-து-பிரான்சுக்குள் வீடில்லாமல் 700 சிறுவர்கள் வீதியில் தூங்குவதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரபல தொண்டு நிறுவனமான manifesto கடந்த புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாள் இரவிலும் இல்-து-பிரான்சுக்குள் பாதுகாப்பற்ற முறையில் 700 சிறுவர்கள் வீதியில் படுத்து உறங்குகின்றனர்.

அவர்களுக்கான சரியான தங்குமிடங்களை அரசு துரிதமாக ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். இந்த வருடத்தில், மொத்தமாக எட்டு சிறுவர்கள் வீதிகளில் படுத்துறங்குவதால் உயிரிழந்துள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.’

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் திகதி Seine-Saint-Denis நகரில் உள்ள வீதி ஒன்றில் சிறுவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அதே போன்று இந்த மாதம் 4-ஆம் திகதி தலைநகர் பாரிசில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண் ஒருவர் போதிய தங்குமிட வசதி இல்லாததால் உயிரிழந்திருந்தார்.

இதுபோன்ற சம்பவங்களை விளக்கி, அரசை விழித்துக்கொள்ளுமாறு குறித்த தன்னார்வ தொண்டு நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்