பிரான்சில் பெரும் வெள்ளப்பெருக்கு... பலி எண்ணிக்கை உயர்வு: வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி பெரும் சேதம்

Report Print Basu in பிரான்ஸ்

தென்கிழக்கு பிரான்சில் வெள்ளியன்று ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனமழையால் தென்கிழக்கு பிரான்சில் பல ஆறுகள் தங்கள் கரைகளை தாண்டி நகருக்குள் புகுந்துள்ளன, இதனால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின, கார்களும் படகுகளும் நீரால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

தொடர்ந்து பொழிந்த கனமழையால் பிராந்தியத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை பிற்பகுதியில் முய் அருகே மீட்புப் படகில் இருந்து கீழே விழுந்த நபர், நைஸ் மற்றும் மார்ஸைல் நகரங்களுக்கு இடையில் முய் அருகே இறந்த நிலையில் கண்பிடிக்கப்பட்டதாக வார் காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கபாஸ்ஸில் காரில் மற்றொரு சடலமாகவும் மற்றும் டன்னெரோனில் இரண்டு பேர் இறந்து கிடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி செயிண்ட்-அன்டோனின்-டு-வார் நகரில் சனிக்கிழமை காலை முதல் 77 வயதுடைய ஒருவரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்த நிலையில் உள்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் ஞாயிற்றுக்கிழமை வார் நகருக்கு பாதிக்கப்பட்டவர்களையும் மீட்புப் பணியாளர்களையும் சந்திக்கப் பயணம் செய்தார்.

தற்போது, தென்கிழக்கு பிரான்சில் முந்தைய நாட்களைப் போல மழை கனமாக இல்லை, வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது என உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்