மெக்ஸிகோவில் நடிகருடன் கடத்தப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்! தீவிர தேடுதலில் பொலிசார்

Report Print Abisha in பிரான்ஸ்

மெக்ஸிகோவில் உள்ள தேசிய பூங்காவிற்கு சென்ற பிரான்ஸ் குடியுரிமை பெற்றவரும், மெக்ஸிகோ நாட்டவரும் கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டில் உள்ள பிரான்சு தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மெக்ஸிகோ நகரில் கடத்தப்பட்ட இருவரும் தேசிய பூங்கவிற்கு சுற்றுலா வந்தவர்கள் என்று தூதகரம் AFPக்கு தெரிவித்துள்ளது.

கடந்தப்பட்டவர்களில் பிரான்ஸ் குடியுரிமைபெற்ற நபரின் பெயர் Frederic Michel என்றும். மெக்ஸிகோவை சேர்ந்த நபர் Alejandro Sandi என்று வெளியிடப்பட்டுள்ளது. Alejandro Sandi மெக்ஸிகோ நாட்டின் நடிகர் ஆவார்.

இருவரும், மத்திய மெக்ஸிக்கோவின் Toluca நகரில் உள்ள Nevado Volcano பூங்காவிற்கு பயணித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள பூங்காவில், பொலிசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மெக்ஸிகோவில் இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் 38 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,700 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் சிவில் அமைப்பான ஆல்டோ அல் செக்யூஸ்ட்ரோ தெரிவித்துள்ளது.

முன்னதாக ஜூன் மாதத்தில் மேற்கு நகரான Guadalajara-ல் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவம் படிக்கும் மாணவன் ஒருவர் கடத்தப்பட்டு ஐந்து நாட்களுக்கு பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படாமல் அமெரிக்காவிற்கு அந்த மாணவன் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்