பெண்ணுக்கு பிச்சை கொடுத்ததற்காக 100 யூரோக்கள் அபராதம் விதித்த அதிகாரிகள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ரயில் நிலையம் ஒன்றில் பெண்ணுக்கு பிச்சை கொடுத்ததற்காக ஒருவருக்கு அதிகாரிகள் 100 யூரோக்கள் அபராதம் விதித்தனர்.

Toulouse ரயில் நிலையத்தில் ஏ டி எம் இயந்திரத்தில் ஒருவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.

அப்போது அவரை கைக்குழந்தையுடன் நெருங்கிய ஒரு பெண், தன் குழந்தைக்கு உணவு ஏதாவது வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்க, தன்னிடமிருந்த பணத்தை கொடுத்துள்ளார் அவர்.

உடனடியாக அவரை நெருங்கிய அதிகாரிகள் அவருக்கு 100 யூரோக்கள் அபராதம் விதித்தனர்.

அந்த பெண் தன்னிடம் பணம் கேட்கவில்லை என்று கூறியும் அவர்கள் ஒப்புக்கொள்ளாமல் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர்.

ஆனால் இந்த விடயம் மக்களிடயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சர்ச்சை ஏற்பட்ட உடன், ரயில்வே துறை, அந்த அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் கொஞ்சம் அதிகம்தான் என்று ஒப்புக்கொண்டது.

தற்போது அந்த நபரை தேடி வருவதாக தெரிவித்துள்ள ரயில்வே, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

பிரான்சில் ரயில் நிலையங்களில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்