லண்டன்.. ஹேக்.. நகரங்களை அடுத்து பாரிஸில் தாக்குதல் பீதி: இணையத்தில் பரவிய புகைப்படம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் மர்ம பையில் வெடிக்குண்டு போன்ற சாதனம் இருந்தது பீதியை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸில் உள்ள கரே டு நோர்ட் ரயில் நிலையத்திலே வெடிக்குண்டு பீதி ஏற்பட்டது.

லண்டன், ஹேக் என ஐரோப்பா முழுவதும் தொடர்ச்சியான கத்திக்குத்து தாக்குதல்களின் பின்னணியில் இச்சம்பவம் நடந்துள்ளதால் பயங்கரவாதத்தின் அச்சத்தைத் தூண்டியது.

கரே டு நோர்ட் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கவனிக்கப்படாத பை காரணமாக பயணிகள் நிலையத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை பல தவறான எச்சரிக்கையத் தொடர்ந்து, ரயில்வே நிறுவனம் எஸ்.என்.சி.எஃப். பொலிஸ் சில விவரங்களை வழங்கியது, ஆனால் பின்னர் அனைத்தையும் தெளிவுப்படுத்தியுள்ளது.

பீரங்கி ஷெல் வெடிகுண்டு போல் பையில் இருந்த சாதனத்தின் உறுதிப்படுத்தப்படாத புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன, சிலர் இந்த பொருளை இராணுவம் பயிற்சிக்கு பயன்படுத்தும் வெடிக்காத போலி என்று பரிந்துரைக்கின்றனர்.

வெளியேற்றப்பட்ட பயணிகள் அனைவரும் சுமார் 40 நிமிடங்கள் ரயில் நிலையத்திற்கு வெளியே காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, எஸ்.என்.சி.எஃப், நகரத்தின் பிற ரயில் சேவை பாதிக்கப்படவில்லை என்று கூறினார்.

சம்பவம் தொடர்பில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருதாகவும், கைது செய்யப்பட்டவர் இராணுவ வீரர் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்