பிரான்ஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த வீரர்கள்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்சில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஹெலிகாப்டர் 22:30 மணியளவில் மரிக்னேன் தளத்திலிருந்து, வார் மாகாணத்தில் உள்ள லூக் நகரத்தை நோக்கி புறப்பட்டது, அங்கு ஒரு நபர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் மார்சேயின் வடக்கே ரோவின் கரடுமுரடான நிலப்பரப்பில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

டிசம்பர் 1ம் திகதி மாலை, உள்ளுர் பாதுகாப்பு ஹெலிகாப்டரான EC145 லி லூக் - லு கேனட் பகுதியை நோக்கி மீட்பு பணிக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது, வானொலி மற்றும் ரேடார் இணைப்புகள் தூண்டிகப்பட்டன என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று பேரும் அதிகாலை 1:30 மணியளவில் ரோவ் நகருக்கு அருகில் இறந்து கிடந்தனர்.

இதில், விமானி ஜீன் காரட், விமான பொறியியலாளர் மெக்கானிக் மைக்கேல் எஸ்கலின் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் ஹெலிகாப்டர் மீட்பு உதவியாளர் நோர்பர்ட் சவோர்னின் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

விபத்தின் சூழ்நிலைகளைத் தீர்மானிக்க விசாரணை நடந்து வருகிறது என உள்துறை அமைச்சர் கிறிஸ்டோப் காஸ்டானர் தெரிவித்துள்ளார்.

மேலும், மாலி நாட்டில் இறந்த 13 வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில், பிரனாஸ் மக்களைப் பாதுகாக்க தங்கள் உயிரைக் கொடுத்த மூன்று வீரர்களை நம் நாடு இழந்தது என்று காஸ்டானர் கூறினார்.

பிரான்ஸ் ரிவியராவில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் கொல்லப்பட்டனர், இது மோசமான வானிலை காரணமாக ஆறு பேர் கொல்லப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு தற்போது புதிய மழை பெய்து வருகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்