பிரான்சில் 20 ஆண்டுகளில் 20,000 பேரை காவு கொண்ட விடயம்: ஒரு அதிர்ச்சி அறிக்கை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
248Shares

பிரான்சில் 20 ஆண்டுகளில் 20,000 பேரை காவு கொள்வதற்கு காரணமாக இருந்துள்ளது ஒரு விடயம், அது மோசமான சீதோஷ்ண நிலை.

சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்று இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 183 நாடுகளில் சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்படும் வெப்பம், புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற மோசமான நிகழ்வுகளால் எத்தனை உயிர்கள் பலியாகியுள்ளன என்பதை ஜேர்மன் அமைப்பு ஒன்று மேற்கோண்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை தெரியப்படுத்தியுள்ளது.

1999-லிருந்து, பிரான்சில் மட்டும், சுமார் 20,000 பேர் வெப்பம், புயல் மற்றும் பெருவெள்ளம் போன்ற மோசமான நிகழ்வுகளால் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் கூட, தென் கிழக்கு பிரான்சில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக ஆறு பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

1999இலிருந்து, உலகம் முழுவதிலும் நிகழ்ந்த 12,000 மோசமான சீதோஷ்ண நிகழ்வுகளால் 500,000 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பிரான்சில், 2003இல் ஏற்பட்ட அதீத வெப்பத்தால் 15,000 பேர், அவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள், உயிரிழந்தனர். 2006இல் 1,800 பேரும், 2018இல் 1,500 பேரும் கூட அதீத வெப்பத்தால் பலியானார்கள்.

AFP

உள்ளூர் அலுவலர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக, 2019இல் அந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.

வெப்பத்தை அடுத்து அதிக அளவில் உயிர்ப்பலி வாங்கியது பெருவெள்ளம். 1999இல் பெருவெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 35, 2007இல் 27. Xynthia புயல் 2010இல் 53 உயிர்களைக் காவு வாங்கியது.

கிழக்கு பிரான்சில், கடந்த 15 நாட்களில் பெருவெள்ளத்தால் பலியான ஏழு பேரின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்படவில்லை.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்