பிரான்சில் மீண்டும் அடுத்த வாரம் வேலை நிறுத்தம்?: அழைப்பு விடுத்துள்ள தொழிற்சங்கங்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

ஏற்கனவே வேலை நிறுத்தங்களால் பிரான்ஸ் திணறிக்கொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஒரு வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

தொழிற்சங்கங்கள் கூடி ஆலோசனை செய்த கூட்டம் ஒன்றிற்கு பிறகு, டிசம்பர் 19ஆம் திகதி, அதாவது, அடுத்த செவ்வாய்க்கிழமை மீண்டும் ஒரு வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஏற்கனவே சுழற்சி முறையில் வேலைநிறுத்தங்கள் மேற்கொண்டு வரும் ரயில்வே ஊழியர்கள் மற்றும் விமான கட்டுப்பாட்டு ஊழியர்கள் முதலானோரும், செவ்வாய் வரை வேலை நிறுத்தத்தை தொடர்வதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அரசு கொண்டுவர இருக்கும் புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, பல மில்லியன் பணியாளர்கள், குறைந்த ஓய்வூதியம் பெற இருப்பதோடு, தங்கள் அதிகாரப்பூர்வ ஓய்வூதிய வயதான 62 வயதுக்குப் பின்னும் வேலை செய்யவேண்டியிருக்கும்.

எனவே அதை எதிர்த்து ஏராளமான பணியாளர்கள் சாலையில் இறங்கி வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

வேலை நிறுத்தத்தின் முதல் நாளான வியாழனன்று சுமார் 800,000 பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதோடு, அதையே மீண்டும் செவ்வாயன்றும் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், வேலை நிறுத்தத்தால் தங்கள் அன்றாட வாழ்வில் இடைஞ்சல்கள் ஏற்பட்டுள்ள நிலையிலும், பொதுமக்கள் 60 சதவிகிதம் பேர் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

AFP

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்