நம்பி உடலை ஒப்படைத்த நோயாளிகள் 349 பேரை துஷ்பிரயோகம் செய்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மருத்துவர் என்று நம்பி உடலை நோயாளிகள் ஒப்படைக்க, தனது மருத்துவ தொழிலை தவறாக பயன்படுத்தி, 30 ஆண்டுகளுக்கு மேலாக, குழந்தைகள் உட்பட 349 பேரை துஷ்பிரயோகம் செய்த பிரான்ஸ் நாட்டு மருத்துவர் ஒருவர் சிக்கியுள்ளார்.

Joel Le Scouarnec (68) என்பவர் மத்திய மற்றும் மேற்கு பிரான்சிலுள்ள பல மருத்துவமனைகளில் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

அவர் மீது பக்கத்து வீட்டில் வசித்த ஆறு வயது சிறுமியையும், உறவினரின் குழந்தை ஒன்றையும் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கியதாகவும், நோயாளியாக வந்த குழந்தை ஒன்றை துஷ்பிரயோகம் செய்ததாகவும், ஒரு பெண்ணிடம் அநகரீகமாக நடந்துகொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவரது வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது பல டைரிகள் சிக்கின. அவற்றில், தான் எப்படி குழந்தைகள் உட்பட பல பெண்களுடன் பாலுறவு கொண்டேன் என்பதை விவரமாக விளக்கியிருந்தார் Joel.

அதன் பின்னர்தான் வயிறு அறுவை சிகிச்சை நிபுணரான அவர், தன்னிடம் வந்த நோயாளிகளில் குழந்தைகள் உட்பட சுமார் 349 பேரை கடந்த 30 வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் அல்லது வன்புணர்வு செய்துவந்தார் என்பது தெரியவந்தது.

பொலிஸ் அதிகாரி ஒருவர், இன்றைய கணக்கிற்கு பிரான்சில் இதுதான் குழந்தைகளை சீரழித்த பெரிய வழக்காக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள Joel, விசாரணைக்காக காத்திருக்கிறார்.

மார்ச் 13 முதல் 17 வரை அவர் Saintes நகரில் விசாரிக்கப்பட உள்ளார். Joel மீது தற்போதைக்கு சாட்டப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டாலே, அவர் 20 ஆண்டுகள் வரை சிறையில் செலவிட வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...