வீட்டு தோட்டத்திலிருந்து வரும் தவளை சத்தம்... அயலகத்தார் புகார்: நீதிமன்ற உத்தரவை எதிர்க்கும் பிரெஞ்சு தம்பதி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் ஒரு தம்பதியின் வீட்டு தோட்டத்திலிருந்து வரும் சத்தம் தொல்லை ஏற்படுத்துவதாக அயலகத்தார் புகார் செய்ய, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருக்கிறார்கள் தம்பதியினர்.

பிரான்சில் Dordogne பகுதியில் வசித்து வரும் Michel Pecheras என்பவர் வீட்டு தோட்டத்தில் ஒரு குளம் உள்ளது.

அந்த குளத்தில் உள்ள தவளைகள் ஏற்படுத்தும் சத்தம் இடைஞ்சலாக உள்ளதாக அயலகத்தார் அளித்த புகாரை ஏற்ற நீதிமன்றம் ஒன்று, அந்த குளத்தை மண் போட்டு நிரப்ப உத்தரவிட்டது.

ஆனால், அந்த குளத்தை இழக்க மனமில்லாத Michelம் அவரது மனைவியும், அந்த தவளைகள் ஏற்படுத்தும் சத்தம் ஒரு புல் வெட்டும் கருவி ஏற்படுத்தும் சத்தத்தை மட்டுமே ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

நிபுணர்கள் வந்து சோதித்து, அந்த சத்தம் ஒரு துணி துவைக்கும் எந்திரம் ஏற்படுத்தும் சத்தத்தின் அளவிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் அயலகத்தாரின் புகாரின் பேரில் நீதிமன்றம் குளத்தை மூட உத்தரவிட்டும், தீர்ப்புக்கு அடிபணியாவிட்டால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டிவரலாம் என்ற நிலையிலும், சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றின் உதவியுடன் தங்கள் குளத்தை பாதுகாக்க போராடி வருகின்றனர் தம்பதியர்.

குளத்தை மூட உத்தரவிட்டுள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளனர் தம்பதியர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்