உலகில் அமைதி நிலவ வேண்டும்: போப் பிரான்சிஸின் கிறிஸ்துமஸ் உரை

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் உலகில் அமைதி நிலவ போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தியுள்ளார்.

அவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில், மேற்கு ஆசிய நாடுகளிலும் உலகின் பிற பகுதிகளிலும் போர் மற்றும் உள்நாட்டு சண்டையால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 10 ஆண்டுகளாக முடிவில்லாமல் நீளும் போரால் சிரியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அந்நாட்டின் இன்னல்கள் நீங்க ஆண்டவன் அருள்புரியட்டும்.

நாட்டில் அமைதி திரும்பும் என மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர், அந்நாட்டில் வசிக்கும் குழந்தைகளின் வாழ்வில் இறைவன் ஒளியேற்ற பிரார்த்திக்கிறேன்.

இதேபோன்று தென் அமெரிக்க கண்டத்தின் பல நாடுகள், வெனிசுலா, ஈராக், சூடான் போன்ற நாடுகளின் மக்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

பல்வேறு நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி வரும் மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஆப்பிரிக்க நாடுகளில் தாக்குதலை எதிர்நோக்கியுள்ள கிறிஸ்துவ மக்கள்மற்றும் பிற மதத்தினரும் நலம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்