காணாமல் போன 25 வயது காதலர்: அவரை கடத்தியதாக பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள 59 வயது காதலி!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தன்னைவிட 30 வயது இளையவரான ஒருவரை காதலித்த அவுஸ்திரேலிய பெண் ஒருவர், காதலர் மர்மமான முறையில் காணாமல் போனது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியைச் சேர்ந்த Samba Widhyastuti (59), பிரான்சைச் சேர்ந்த Florent Gregoire (25) என்பவரைக் காதலித்துள்ளார்.

இருவரும் சேர்ந்து ஸ்பெயின் மற்றும் அண்டோரா ஆகிய நாடுகளில் சுற்றியுள்ள நிலையில், பிரான்சுக்கு செல்வதாக பயணச்சீட்டு வாங்கிகொண்டு புறப்பட்ட Gregoire, பிரான்ஸ் திரும்பவேயில்லை.

மகன் வீடு திரும்பாததையடுத்து Gregoireஇன் பெற்றோர் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர்.

இதற்கிடையில் Gregoireயின் பெற்றோரை தொலைபேசியில் அழைத்துள்ள Samba, அவர் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளதோடு, அவர் பெயரில் போலியாக மின்னஞ்சல்களும் செலுத்தியுள்ளார்.

முதலில் Samba மீது சந்தேகப்படாத பொலிசாருக்கு, Gregoireயின் பெற்றோர் தங்கள் மகன் குறித்து கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதனால் Samba பிரான்சுக்கு வரும்வரை காத்திருந்த பொலிசார், அவர் Charles de Gaulle விமான நிலையத்தில் வந்து இறங்கியதும், அவரை கைது செய்துள்ளனர்.

Gregoireஐ கடத்தி, அவரது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைத்ததாக குற்றம் சாட்டி Samba சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்