பிரான்சில் புதிய விதி அமுல்..! நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் மக்களின் தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு ஆபத்து

Report Print Basu in பிரான்ஸ்

நாட்டில் வரி மோசடி செய்பவர்களை கண்டறிய சமூக ஊடகங்களை ஆய்வு செய்யும் திட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் முன்னெடுக்கலாம் என அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன் மூலம் கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கான ஆதாரங்களை கண்டறிய சுங்க மற்றும் வரி அதிகாரிகள், பயனர்களின் சமூக ஊடக சுயவிவரங்கள், பதிவுகள் மற்றும் படங்களை மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய விதிகள் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட வரி மாற்றங்கள் குறித்த விரிவான சட்டத்தின் ஒரு பகுதியாகும். மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் பிரான்ஸ் தரவு பாதுகாப்பு ஆணையம் இந்த நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்தன.

இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை மற்றும் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படலாம் என்று ஒப்புக் கொண்ட நீதிமன்றம், ஆனால் அது சட்டப் படி முடியும் என குறிப்பிட்டுள்ளது.

கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட தகவல்கள் வரம்பற்றது என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், நபர் தொடர்பான பொது தகவல்களை மட்டுமே அவர்கள் பயன்படுத்த முடியும் என்றும் நீதிமன்றம் கூறியது.

தகவல் எவ்வாறு ஆய்வு செய்யப்படுகிறது என்பதை கட்டுப்பாட்டாளர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

தரவுகளை பெருமளவில் சேகரிப்பது பிரான்ஸ் அரசாங்கத்தின் மூன்று ஆண்டு இணைய கண்காணிப்பு பரிசோதனையின் ஒரு பகுதியாகும், மேலும் இது நாட்டின் இணைய கண்காணிப்பு அதிகாரங்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

அரசாங்கத்தின் நோக்கங்கள் முறையானது என்பதை அங்கீகரித்ததாக பிரான்சின் தரவு கண்காணிப்புக் குழுவான சி.என்.ஐ.எல் கூறியது, ஆனால் புதிய கொள்கை தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் கூறியது.

புதிய விதிகளை ‘மோசடிக்கு எதிராக போராட மேலும் ஒரு கருவி’ என்று நிதியமைச்சர் ஜெரால்ட் டர்மனின் சமீபத்தில் அழைத்தார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்