பிரான்ஸிக்கும் ஈரானுக்கும் இடையே முற்றும் வார்த்தை போர்..! விஸ்வரூபமெடுக்கும் கல்வியாளர் கைது

Report Print Basu in பிரான்ஸ்

சிறையில் அடைக்கப்பட்ட கல்வியாளர் ஃபரிபா அடெல்காவை கைது விவகாரத்தில் பிரான்சின் ‘தலையீட்டிற்காக’ ஈரான் கொந்தளித்துள்ளது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க ஈரானிய தூதரை வரவழைத்ததாக இரண்டு நாட்களுக்கு பின்னர் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் மெளசவி அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அடெல்கா மற்றும் ரோலண்ட் மார்ச்சல் ஆகிய இரு பிரான்ஸ கல்வியாளர்களை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் காவலில் வைத்திருப்பது தொடர்பாக பிரான்ஸ் வெள்ளிக்கிழமை ஈரான் தூதரை அழைத்த பேச்சு வார்த்தை நடத்தியது.

மேலும், அடெல்கா உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் பிரான்ஸ் ‘கடுமையான கவலையை’ வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஈரானிய நாட்டவர் தொடர்பாக பிரான்சின் வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை தலையிடுவதற்கான செயல் என்றும், அவர்களின் கோரிக்கையில் எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்று ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் மெளசவி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஃபரிபா அடெல்கா மற்றும் ரோலண்ட் மார்ச்சல் ஆகியோர் தாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஈரானிய அதிகாரிகள் தங்கள் நிலைமை குறித்து முழு வெளிப்படைத்தன்மையைக் காட்ட வேண்டும் என்றும் பிரான்ஸ் ஈரான் தூதரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸில் உள்ள சயின்சஸ் போவின் கல்வியாளர்களான அடெல்கா மற்றும் மார்ச்சல் இருவரும் ஈரானிய அதிகாரிகளால் ஜூன் முதல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள அடெல்காவும், மற்றொரு கல்வியாளருமான அவுஸ்திரேலிய கைலி மூர்-கில்பர்ட் ஆகியோர் இந்த மாதத்தில் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர் என்று பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்