பாரிஸில் 24 வது நாளாக தொடரும் போராட்டம்! முன்பிருந்த சாதனை முறியடிப்பு

Report Print Abisha in பிரான்ஸ்

28ஆம் திகதி நடந்த தொடர் வேலை நிறுத்த போராட்டத்தால் 1995ஆம் ஆண்டு நிகழ்த்திய போராட்ட சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

28ஆம் திகதி பாரிஸில் 24வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்றது. ஓய்வூதியத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த போராட்டமானது நேற்றைய தினம், 1995ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

அப்பேதைய அரசை எதிர்த்து 22 நாட்கள் தொடர் போராட்டம் நடைபெற்றது.

நேற்று நடத்த போராட்டத்தில், 300 வரையான மஞ்சள் மேலங்கி போராளிகளும், CGT, FO, Solidaires மற்றும் FSU ஆகிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

13:30 மணி அளவில் கார்-து.-நோர் நிலையத்தில் குவிந்த தொழிலாளர்கள் பின்னர் அங்கிருந்து சத்தலே நிலையம் நோக்கி பயணித்தனர்.

இது குறித்து தொழிலாளர்கள் தரப்பில் “மிக நீண்டகாலமாக அரசு அமைதி காக்கின்றது. அதனால் நாங்கள் கட்டாயமாக போராட்டத்தை தொடரவேண்டி உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...