வீடு திரும்ப முடியாமல் வெளியூரில் திகைத்த இளம்பெண்ணுக்கு உதவிய அந்நியர்: பின்னர் தெரியவந்த உண்மை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் தான் பயணிக்கவேண்டிய ரயில், வேலை நிறுத்தம் காரணமாக ரத்து செய்யப்பட்டதால் வெளியூரில் சிக்கிக்கொண்டார் ஒரு பெண்.

தான் தனது காதலருடன் விடுமுறையைக் கழிக்க போட்டிருந்த திட்டமெல்லாம் வீணாய்ப்போனதே என எண்ண, கண்ணீர் முட்டிக்கொண்டு வந்திருக்கிறது, இசபெல் என்ற அந்த பெண்ணுக்கு.

பொங்கிய கண்ணீர் கன்னத்தில் வழியும் முன், ரயில்வே ஊழியர் ஒருவர் அவரை அணுகியுள்ளார்.

இசபெல்லிடம் டிக்கெட் ஒன்றைக் கொடுத்த அந்த ஊழியர், மற்றொரு பயணி அதைக் கொடுத்ததாக கூற, மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக்கொண்டார் அவர்.

அதைப் பயன்படுத்தி பத்திரமாக அவரால் வீடு திரும்ப முடிந்துள்ளது. மிகவும் மகிழ்ந்து நெகிழ்ந்தும் போன இசபெல், பேஸ்புக்கில் தனக்கு டிக்கெட் கொடுத்து உதவியவருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

டிகெட்டிலிலிருந்த உங்கள் பெயர் மட்டும்தான் எனக்குத் தெரியும், உங்கள் முகம் கூட எனக்குத் தெரியாது.

என்னால் நம்பவே முடியவில்லை, நன் அழவேயில்லை, என் கன்னத்தில் போட்ட மேக் அப் கூட அழியவில்லை, அதற்குள் நான் பத்திரமாக வீடு திரும்பிவிட்டேன்.

உங்களுக்கு எனது உள்ளத்தின் ஆழத்தில் இருந்து எனது நன்றி, நீங்கள்தான் இந்த ஆண்டு எனது சாண்டா என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

அடுத்த நாள் இசபெல்லை தொடர்பு கொண்ட ஒரு பெண், உங்களுக்கு உதவியவர் எனது அண்ணன்தான் என்று கூறி, உண்மையில் அந்த டிக்கெட் எங்கள் அம்மாவுக்காக எடுக்கப்பட்டது.

ஆனால் கடைசி நேரத்தில் எங்கள் அம்மா தனது பயணத்திட்டத்தை மாற்றிவிட்டார். ஆகவே, ஆண்ணன் அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணமாக்குவதற்கு பதிலாக, உங்களுக்கு கொடுத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் தனக்கு டிக்கெட் கொடுத்து உதவியவர், தான் பயணித்த அதே ரயிலில், தனக்கு பக்கத்திலேயேதான் உட்கார்ந்து பயணித்தார் என்றும் அந்த பெண் கூற என்ன ரியாக்‌ஷன் காட்டுவது என்றே தெரியாமல் திகைத்துப்போனார் இசபெல்!

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்