நடுக்கடலில் குழந்தைகளுடன் வாழ்வா.. சாவா.. என போராடிய அகதிகள்... கடவுள் போல் வந்து காப்பாற்றிய பிரான்ஸ் மீனவர்கள்

Report Print Basu in பிரான்ஸ்

நடுக்கடலில் தத்தளித்த இரண்டு குழந்தைகள் உட்பட 19 புலம்பெயர்ந்தோரை தக்க சமயத்தில் பிரான்ஸ் மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கில கால்வாய் வழியாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயன்றது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக 10 பேர் பயணிக்க வேண்டிய சிறிய கப்பலில் 19 பேர் பயணித்தால் நடுக்கடலில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

எனினும், ஹென்னி என்ற பிரான்ஸ் மீன்பிடி படகு தக்க சமயத்தில், நடுக்கடலில் தத்தளித்த 16 ஆண்கள், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டுள்ளனர்.

அவர்களில் பலர் தாழ்வெப்பநிலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் டன்கிர்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் பிரான்ஸ் எல்லை அதிகாரிகளால் விசாரிக்கப்படுகிறார்கள்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோரின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. அவர்கள் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய கடத்தல்காரர்களுக்கு பயணம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என பிரித்தானியா அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எனினும், பிரக்சிட்டிற்கு முன் பிரித்தானியாவிற்குள் நுழைந்து விட வேண்டும் என அகதிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருதாக கூறப்படுகிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்