புதுவருட கொண்டாட்டம்... பாதுகாப்பு வளையத்தில் பிரான்ஸ்! ஏற்பட்டுள்ள மாற்றங்கள்

Report Print Abisha in பிரான்ஸ்

புத்தாண்டு கொண்டாட இன்று 13 மணி நேரங்களே உள்ளநிலையில், பிரான்ஸ் நாடு முழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர், Christophe Castaner தெரிவித்துள்ளதாவது “ நாடு முழுவதும் 100,000 காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 19:00மணியில் இருந்து ஜனவரி 2ஆம் திகதி காலை 3:00மணி வரை பாரிஸ் நகரம் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும். Place Charles-de-Gaulle - Etoile, avenue des Champs-Elysées இது தவிர, சோம்ப்ஸ்-எலிசேயின் நுழைவுப் பகுதிகளும் பலத்த பாதுகாப்பின் கீழ் இருக்கும்.

அனைத்து இங்களிலும் தடை அமைக்கப்பட்டுள்ளதுடன், ஆயுதங்களை அடையாளம் காணும் பகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சோம்ப்ஸ்-எலிசே புது வருட கொண்டாட்டத்துக்கு கண்டிப்பாக பட்டாசுகள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

Charles de Gaulle - Etoile, George V, Franklin D. Roosevelt, Champs-Elysées-Clemenceau உள்ளிட்ட பல மெற்றோ நிலையங்கள் இன்று பாதுகாப்பு கருதி மூடப்பட உள்ளன.

தவிர பாரிஸின் எந்த பகுதியிலும் முன் அறிவிப்புகள் எதுவும் இன்றி கூட்டங்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Champ-de-Mars - Eiffel Tower சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள், மகிழுந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தவிர இன்று இரவு 10 மணியில் இருந்து வியாழக்கிழமை அதிகாலை 3 மணி வரை வாகன போக்குவரத்துக்களும் அப்பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்