பிரான்ஸ் கடற்கரையில் நிர்வாணமாக குளித்து மகிழ்ந்த மக்கள்.. நெகிழ வைக்கும் பின்னணி காரணம்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸில் 2019ம் ஆண்டின் கடைசி நாளை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக கடலில் நிர்வாணமாக குளித்தனர்.

டிசம்பர் 31 அன்று கேப் டி ஆக்டேயில் ஆண்டின் கடைசி நிர்வாண குளியல் என்பது புத்தாண்டை போலவே ஒரு பாரம்பரியமாகும். சுமார் 30 ஆண்டுகளாக இப்பாரம்பரியம் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு மீண்டும், சூரிய ஒளியின் கீழ் 13 டிகிரி குளிரில் கடல் நீரில் குளிக்க பல நூறு பேர் குவிந்தனர்.

30 ஆண்டுகளாக இந்நிகழ்வு கேப் டி ஆக்டேயில் உள்ள இயற்கை கடற்கரையில் மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த முறை அது நல்ல காரணத்திற்காக இடம்பெற்றுள்ளது. டிசம்பர் 31 அன்று குளியல் நிகழ்விற்காக விற்கப்பட்ட டிக்கெட்டின் வருமானம் எஸ்.என்.எஸ்.எம் கடல்சார் உயிரினங்களை காப்பாற்றும் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 470 பங்கேற்பாளர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இந்நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்