டாக்சிக்கு பணம் இல்லாததால் அழகிய இளம்பெண் செய்த செயல்: உண்மையில் அவர் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸ் சென்றிருந்த ஒரு பிரபல பொப்பிசைப் பாடகி, பர்ஸை பறி கொடுத்ததால் டாக்சிக்கு பணம் இல்லாததால் பணத்துக்கு பதிலாக பாட்டுப் பாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆர்க்கன்ஸ் டைகர்ஸ் என்னும் துணை ராணுவ அமைப்பின் நிறுவனரான Zeljko 'Arkan' Raznatovic என்பவர் ஆயிரக்கணக்கானோரை கொடூரமாக கொன்று குவித்த செர்பியர். அவரது மகள் பிரபல பொப்பிசைப் பாடகி Anastasija Raznatovic (21).

சமீபத்தில் Anastasija தனது தோழியுடன் பாரீஸுக்கு சென்றிருந்தபோது, அவரது பர்ஸ் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது.

ஹொட்டல் அறைக்கு திரும்ப வழியில்லாத இரு இளம்பெண்களும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளனர்.

பின்னர் டாக்சி ஒன்றின் சாரதியிடம், தான் ஒரு பொப்பிசைப் பாடகி என்று கூறிய Anastasija, தங்களை ஹொட்டல் அறையில் கொண்டு விடுமாறு கேட்டுக்கொண்டு, அதற்கு பதிலாக வழியெல்லாம் தான் பாடல் பாடியபடியே வருவதாக கூற, அந்த சாரதியும் ஓப்புக்கொண்டுள்ளார்.

அப்படியே ஹொட்டலுக்கு சென்று சேர்ந்ததும், பணத்தை எடுத்துக்கொண்டுவந்து டாக்சி சாரதியிடம் கொடுக்க, அவர் பணம் வாங்க மறுத்துள்ளார்.

Arkan மீது ஆயிரம் கொலைகள் மற்றும் மனித இனத்துக்கு எதிரான 24 குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஹொட்டல் ஒன்றின் வெளியே 2000ஆவது ஆண்டு Arkan சுட்டுக்கொல்லப்பட்டபோது Anastasija கைக்குழந்தையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்