தீயணைக்க சென்ற வீட்டில் குளிர் பதன பெட்டிக்குள் பெண் உடல்: அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் வீடு ஒன்றில் பற்றிய தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள், அந்த வீட்டில் இருந்த குளிர் பதன பெட்டிக்குள் ஒரு பெண்ணின் உடல் துண்டுகளாக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்தனர்.

பிரான்சில் வீடு ஒன்று தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.

பின்னர் அந்த வீட்டை சோதனையிட்ட பொலிசார், அங்கிருந்த குளிர் பதனப் பெட்டியைத் திறந்தபோது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த குளிர் பதனப் பெட்டிக்குள் ஒரு பெண்ணின் உடல் துண்டுகளாக்கி வைக்கப்பட்டிருந்தது. அது ஒரு 83 வயது மூதாட்டியின் உடல்.

தொடர்ந்து அந்த வீட்டில் தேடியபோது, அந்த பெண்ணின் பேரனான தனது 30 வயதுகளிலிருக்கும் ஒருவர் சிக்கினார்.

அவரை விசாரித்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக உளறவே, பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். அந்த பெண்ணின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்