பாரிஸ் தெருவில் மர்ம நபர் வெறியாட்டம்: பொலிசார் முன்னெடுத்த துரித நடவடிக்கை

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பாரிஸ் நகரில் வெடிக்கும் ஆடை அணிந்த மர்ம நபர் ஒருவர் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் நான்கு பேரு இரையாகியுள்ளனர்.

குறித்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் துரிதமாக செயல்பாட்டு அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்குப் பிறகு, தலைநகரின் மத்திய பகுதியிலிருந்து ஏழு மைல் தொலைவில் உள்ள Villejuif புறநகரில் இந்த இரத்த வெறியாட்டம் நடந்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு பொதுமக்களில் 130 பேர் பலியாகினர்.

மட்டுமின்றி Charlie Hebdo அலுவலகத்தில் அல்காயிதா ஆதரவு தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதுடன், அலுவலகத்திற்கு வெளியே, அவர்கள் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் பொதுமக்களில் மூவர் கொல்லப்பட்டனர்.

2016 ஆம் ஆண்டு நைஸ் நகரில் லொறி ஒன்றுடன் அசுர வேகத்தில் பொதுமக்கள் மீது முன்னெடுத்த தாக்குதலில் 86 பேர் கொல்லப்பட்டதுடன், 400 பேர் காயங்களுடன் தப்பினர்.

துனீசிய நாட்டவரான குறித்த நபரை பொலிசார் சுட்டு வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்