அமெரிக்காவுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்..! டிரம்பை எச்சரித்த பிரான்ஸ்

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸின் புதிய டிஜிட்டல் வரிக்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தால் கண்டிப்பாக பதிலடி கொடுப்போம் என அந்நாட்டு பொருளாதார அமைச்சர் புருனோ லு மைர் எச்சரித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய புருனோ லு மைர், அமெரிக்கர்கள் டிஜிட்டல் வரிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்தால் ... இந்த விஷயத்தில் நாங்கள் பதிலடி கொடுப்போம்.

பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால், நாங்கள் பொருளாதாரத் தடைகளை எடுப்பதற்கான சாத்தியம் இருந்தால், உடனடியாக உலக வர்த்தக அமைப்பை தொடர்புகொள்வோம்.

இந்த வர்த்தகப் போர் யாருக்கும் நல்லது இல்லை, எங்கள் அமெரிக்க நண்பர்கள், அறிவை வெளிப்படுத்தி அவர்களின் உணர்வுக்குத் திரும்ப வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்டீவன் முனுச்சினுடன் தொலைபேசியில் கலந்துரையாட உள்ளதாக கூறிய லு மைர், ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்ற 27 உறுப்பினர்களிடமிருந்தும் இதற்கு ஆதர பெற முடியும் என குறிப்பிட்டார்.

செவ்வாயன்று ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் பில் ஹோகனுடன் சந்திக்கப் போவதாக கூறிய லு மைர், இதன் போது வணிக ரீதியான பதிலடி கொடுக்கும் சாத்தியத்தை குறித்து ஆசோசனை நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் டிஜிட்டல் வரி, ஆன்லைன் நிறுவன வருவாயில் மூன்று சதவீதம் வரை மற்றும் பிரான்சில் பெறப்பட்ட விளம்பரங்களை உள்ளடக்கியது.

ஆனால் இந்த புதிய பிரான்ஸ் வரி, கூகிள், ஆப்பிள், பேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற அமெரிக்க நிறுவனங்களை பாதிக்கும் வகையில் உள்ளது என்று டிரம்ப் நிர்வாகம் கூறியது.

மேலும், ஷாம்பெயின், தோல் பொருட்கள், ஒப்பனை மற்றும் பிரான்சில் தயாரிக்கப்படும் பிற ஆடம்பரங்கள் உள்ளிட்ட பிரான்ஸ் ஏற்றுமதிக்கு 100 சதவீத வரி என பதிலடித் தடைகளை விதிக்கப்போவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்