பிரான்சில் அடித்து நொறுக்கப்பட்டுள்ள கல்லறைகள்: என்ன காரணம்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் இடுகாடு ஒன்றிலுள்ள பல கல்லறைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், அவை யூதர்களுடைய கல்லறைகள் என்பதால் யூத வெறுப்பாளர்களின் வேலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Bayonne மற்றும் Biarritz நகரங்களிலுள்ள யூதர்களின் தலைவராக இருக்கும் Deborah Loupien-Suares, தனது தாத்தா பாட்டியின் கல்லறைக்கு சென்றுள்ளார். அப்போது யூதர்களின் கல்லறைகள் பல அடித்து நொறுக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பல கல்லறைகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 கல்லறைகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதைக் கண்டு, தான் பயங்கர அதிர்ச்சியடைந்ததாக அவர் தெரிவித்தார்.

கல்லறைகளில் பெயர் எழுதப்படும் பலகைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக இரண்டாம் உலகப்போரின்போது நாடு கடத்தப்பட்ட சிறுமி ஒருவரின் நினைவிடம் நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிசாரிடம் அவர் குற்றவியல் புகாரளிப்பதாக தெரிவித்துள்ள நிலையில், தாங்களும் நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யூதர்களுக்கெதிரான அடையாளங்கள் எதுவும் அங்கு கிறுக்கப்படவில்லை என்பதால், அதைக்குறித்து ஒரு விவாதத்தை துவக்க தான் விரும்பவில்லை என்றும், அமைதியாக ஒரு விசாரணை மேற்கொள்ளப்படுவதையே தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் Deborah.

அதே நேரத்தில், யூதர்களின் இடுகாட்டுக்கு எதிரிலேயே அமைந்துள்ள கத்தோலிக்கர்களின் இடுகாட்டிலுள்ள எந்த கல்லறைக்கும் எந்த சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்