30 யூரோக்களுக்கு தொலைக்காட்சி பெட்டி கொடுப்பதாக விளம்பரம் செய்த நிறுவனம்: பின்னர் வெளியான உண்மை!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
390Shares

பிரான்சில் 30 யூரோக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டி கொடுப்பதாக நிறுவனம் ஒன்று விளம்பரம் செய்ததை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனம் முன்பு குவிந்தனர்.

Montpellier நகரிலுள்ள Géant Casino நிறுவனம், 30.99 யூரோக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை விற்பதாக விளம்பரம் செய்திருந்தது.

அதை நம்பி ஏராளமானோர் நிறுவனம் முன் குவிந்தனர்.

ஆனால், தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 399 யூரோக்கள் என்றும், தவறுதலாக 30.99 யூரோக்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டுவிட்டதாகவும் நிறுவனத்தார் கூறியுள்ளனர்.

கோபமடைந்த மக்கள் நான்கு முதல் ஐந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை எடுத்து வைத்துக்கொண்டு, 30.99 யூரோக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை கொடுக்க வேண்டும் என வற்புறுத்தத் தொடங்கினர்.

நிறுவனத்தினர் வேறு வழியின்றி பொலிசாரை அழைத்தனர்.

பொலிசார் வந்தாலும், கோபமுற்ற மக்களை கடை மூடும் நேரம் வந்த பின்னரே அங்கிருந்து அப்புறப்படுத்த முடிந்தது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்