பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் கொள்ளையடிக்க திட்டம்: சீன மாபியாவுக்கு தொடர்பா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸுக்கு அருகிலுள்ள பிரெஞ்சு அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளையடிக்க திட்டமிட்ட ஒரு கும்பல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சீன மாபியாவுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

ஆசிய கலை பொருட்கள் அடங்கிய பிரெஞ்சு அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக ஸ்பெயின் பொலிசாருக்கு துப்பு கிடைத்துள்ளது. அவர்கள் இந்த தகவலை யூரோபோல் அமைப்புக்கு தெரியப்படுத்தியுள்ளார்கள். பிரான்ஸ் பிரிவு அந்த பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டது.

அப்போது, பிரான்சிலுள்ள ஹொட்டல் அறை ஒன்றில் சந்தேகத்துக்குரிய விதத்தில் ஆறு பேர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.

அந்த ஹொட்டல், குறிப்பிட்ட அருங்காட்சியகத்துக்கு 10 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

GETTY IMAGES

பிரான்ஸ் உளவுப்பிரிவு ஒன்று அந்த சந்தேகத்திற்குரிய நபர்களை கண்காணிக்கத்தொடங்கியுள்ளது.

நீண்ட நாட்கள் கண்காணித்ததில், அந்த ஆறு பேரும், பல முறை குறிப்பிட்ட அருங்காட்சியகத்துக்கு சென்றதும், கையுறைகள், முகமூடிகள், கோடரிகள் முதலான பொருட்களை வாங்கியதும் கவனத்திற்கு வந்துள்ளது.

அத்துடன் அவர்கள் இரண்டு கார்களையும் திருடியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அதிரடியாக அந்த கும்பலை சுற்றிவளைத்துள்ளனர் பொலிசார்.

அப்போது, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புகைப்படங்கள், அவர்கள் அந்த அருங்காட்சியகத்தின் ஆசிய கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதியிலிருந்து சில பொருட்களை கொள்ளையிட திட்டமிட்டிருந்ததற்கு ஆதாரமாக உள்ளது தெரியவந்துள்ளது.

GETTY IMAGES

ஸ்பெயின் நாட்டவர்கள் ஐவரும், சீனர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரும் என மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், அவர்கள் கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக கூறப்படுவதை மறுத்துள்ளனர். அவர்கள் சீன மாபியா ஒன்றைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஸ்பெயினில் சீன மாபியாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர், அவர்கள் பெருமளவில் பணம் புரளும் குற்றங்களில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.

GETTY IMAGES

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்