பிரான்ஸ் கடற்கரையில் நள்ளிரவில் மர்மமாக இறந்து கிடந்த மூவர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்
302Shares

பிரான்ஸ் கடற்கரை பகுதியில் மர்மமான முறையில் மூவரது உடல்கள் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவலளித்தனர்.

Crotoy கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் கிடப்பதைக் கண்டு மக்கள் பொலிசாருக்கு தகவலளித்துள்ளனர். நள்ளிரவுக்குப்பின் மற்றொருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஹெலிகொப்டர்களும் மீட்பு படகுகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. பின்னர் 15 வயதுடைய ஒருவர் நடுங்கும் குளிரில் hypothermia-வால் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் பொலிசார்.

விசாரணையில் kayak எனப்படும் சிறு படகுகளில் பயணிக்கும் உள்ளூர் குழு ஒன்றின் உறுப்பினர்கள் கடலில் படகில் சென்றுள்ளனர்.

பின்னர், அவர்கள் இரு குழுக்களாக பிரிந்துள்ள நிலையில், நால்வர் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.

மற்றவர்கள் வருவார்கள் என அவர்கள் நம்பியிருந்த நிலையில், அவர்களில் மூவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் தண்ணீரில் சிக்கி hypothermiaவால் பாதிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்