இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்: ஒளிந்து கொள்ள ஆலோசனை கூறிய பொலிசார்: என்ன காரணம்?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் இளம்பெண் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை எங்காவது சென்று ஒளிந்துகொள்ளுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர். Lyonஐச் சேர்ந்த மிலா (16) என்ற இளம்பெண் இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.

பொதுவாக பாடல்கள் பாடி பதிவேற்றம் செய்யும் மிலா, ஒரு முறை இஸ்லாமின் புனித நூலில் வெறும் வெறுப்புதான் நிறைந்துள்ளது என்று கூறி மோசமான வார்த்தைகளால் திட்டி ஒரு வீடியோவை வெளியிட்டார்.

தன்னை பின்தொடருபவர்களில் ஒருவர் தன்னை துன்புறுத்தும் விதத்தில் நடந்துகொள்ளத் தொடங்கியதாகவும், ஓரினச்சேர்க்கை மற்றும் இன ரீதியில் தன்னை தாக்கத் தொடங்கியாதாகவும், பின்னர் அந்த தாக்குதல் மத வடிவிலான தாக்குதலாக திசை திரும்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவர், மிலா எங்கள் அல்லாவை அவமதிக்கிறாள், அவள் நரகத்தில் கிடந்து எரிந்து துடிப்பாள் என்றும் திட்டியுள்ளார்.

அதற்கு பதிலளிப்பதற்காகத்தான் மதங்களை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டாராம் மிலா. அதைத் தொடர்ந்து மிலாவுக்கு மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன.

கொலை மிரட்டல்கள் வரத்தொடங்கியதால் பொலிஸ் பாதுகாப்பை கோரியிருக்கிறார் மிலா. தன்னால் இனி ஒரு பாடகியாக தொடர முடியாததோடு, இனி பள்ளிக்கும் செல்ல முடியாது என்று கூறியுள்ள மிலா பாதுகாப்பு கோர, பொலிசாரோ அவருக்கு ஏராளமான கொலை மிரட்டல்கள் வருவதையடுத்து, அவர் எங்காவது சென்று மறைந்துகொள்வதுதான் நல்லது என அவருக்கு ஆலோசனை கூறியுள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்