பிரான்ஸ் பொலிசாரிடம் இருந்து முக்கிய ஆயுதம் பறிப்பு: வெளியான காரணம்

Report Print Arbin Arbin in பிரான்ஸ்

பிரான்சில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தொடர்ச்சியாக பொலிசார் மீது குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில், பொலிசார் GLI-F4 எனும் ஆயுதத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை உள்துறை அமைச்சர் Christophe Castaner அறிவித்துள்ளார். GLI-F4 ஒரு கிரனைட் வகை குண்டு ஆகும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசப்படும் இந்த கிரனைட் குண்டுகளால் அவர்கள் பலத்த காயம் மற்றும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் வன்முறையை தூண்டுபவர்கள் தனியே தென்படுவதில்லை. அவர்களும் ஒரே நிறத்தில் உள்ளனர். பொலிசாரை இலக்கு வைக்கும் போது பதில் தாக்குதல் நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.

அதை நிறுத்த முடியாது. எனினும் இவ்வகை கிரனைட் குண்டுகள் பயன்படுத்த தற்காலிகமாக தடை விதித்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers