பிரான்ஸ் நகரை கதிகலங்க வைத்த மர்ம நபர்கள்! சரமாரி துப்பாக்கிச்சூடு.. உயிர் பயத்தில் சிதறி ஓடிய மக்கள்: திகிலூட்டும் காட்சி

Report Print Basu in பிரான்ஸ்

பிரான்ஸின் நைம்ஸ் நகரத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிரான்ஸில் உள்ள நைம்ஸ் நகரின் பிஸ்ஸெவின் மாவட்டத்தின் புறநகர் பகுதியிலே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஏ.கே-47 துப்பாக்கிகளுடன் ஒன்று அல்லது இரண்டு பேர் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 முதல் 40 வினாடிகள் தொடர்ந்து துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக சம்பவயிடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூடு இரண்டு ரவுடி கும்பல்களிடையே நடந்திருக்கலாம் என்று உள்ளுர்வாசிகள் ஊகித்துள்ளனர்.இந்த தாக்குதலில் எந்தவிதமான உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவயிடத்தில் இருந்த சிலர் எடுத்து வெளியிட்ட வீடியோவில், திடீரென சரமாரியாக துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்கிறது. இதனால், பீதியடைந்த சாலையில் இருந்த மக்கள் தலைதெறிக்க ஓடி ஒளிகின்றனர்.

தகவலறிந்த சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், அப்பகுதியை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers