பிரான்சிலுள்ள பிரித்தானியர்களுக்கு வந்த மின்னஞ்சல்: குழப்பத்தை ஏற்படுத்திய பிரித்தானியா!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரித்தானியா அனுப்பிய ஒரு மின்னஞ்சலால் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு தேவையற்ற குழப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

தங்கள் ஓட்டுநர் உரிமங்களை உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய ஓட்டுநர் உரிமங்களாக மாற்றிக்கொள்ள வேண்டும் என அந்த மின்னஞ்சல் குறிப்பிட்டதால் மக்கள் குழப்பமடைந்தனர்.

பிரித்தானிய அரசின் பிரெக்சிட் ஆலோசனை பக்கத்திற்கு சப்ஸ்கிரைப் செய்திருந்தவர்களுக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது.

அதில் வாகனம் ஓட்டுவது தொடர்பான தகவல்களில் மாற்றம் தொடர்பான செய்தி அது என குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த லிங்கை கிளிக் செய்யும்போது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வாழும் பிரித்தானியர்கள், தங்கள் ஓட்டுநர் உரிமங்களை தாங்கள் வாழும் நாட்டின் ஓட்டுநர் உரிமமாக மாற்றிக்கொள்ளவேண்டும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது சில ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைப் பொருத்தவரையில் உண்மைதான் என்றாலும், பிரான்சில் அப்படியில்லை, அவர்களுக்கு பிரான்ஸ் அதிகாரிகள் முற்றிலும் வித்தியாசமான ஆலோசனையை அளித்துள்ளார்கள்.

பிரான்ஸ் அதிகாரிகள், ஏற்கனவே பிரான்சில் வாழ்ந்துவரும் பிரித்தானியர்களும், transition period முடிவதற்கு முன் பிரான்ஸ் வரும் பிரித்தானியர்களும் தங்கள் ஓட்டுநர் உரிமங்களை மாற்றவேண்டியதில்லை என்று கூறியுள்ளார்கள்.

தங்கள் பிரித்தானிய ஓட்டுநர் உரிமத்தை வைத்தே பிரான்சில் வாகனம் ஓட்டலாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

என்றாலும் சிலருக்கு மட்டும் விதிவிலக்கு: தங்கள் ஓட்டுநர் உரிமத்தை தொலைத்தவர்கள் அல்லது திருட்டுக்கொடுத்தவர்கள். தங்கள் ஓட்டுநர் உரிமத்தில் புதிய ஓட்டுநர் வகை ஒன்றை சேர்த்தவர்கள்.

வாகனம் ஓட்டும்போது தவறு செய்ததால், அதிகாரி ஒருவரால் கட்டாயம் ஓட்டுநர் உரிமத்தை மாற்றவேண்டும் என அறிவுறுத்தப்பட்டபர்கள்.

ஆறு மாதங்களுக்குள் உங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் நிலையில் இருப்பவர்கள்.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் உங்களால் ஓட்டுநர் உரிமத்தை பிரித்தானியாவில் புதுப்பிக்க முடியாது என்பதால் உங்கள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவேண்டி வந்தால், நீங்கள் ஒரு பிரித்தானிய முகவரியை கொடுக்கவேண்டியிருக்கும். அத்துடன் அது உண்மை என நீங்கள் சுய அறிவிப்பு கொடுக்க வேண்டும்.

அதில் நீங்கள் பொய்யான தகவல்களைக் கொடுத்தால் அது தண்டனைக்குரிய குற்றச்செயலாக கருதப்படும்.

இப்படியிருக்கும் நிலையில்தான், பிரித்தானியா அனுப்பிய மின்னஞ்சல் பிரான்சில் வாழும் பிரித்தானியர்களை குழப்பிவிட்டது.

எனவே, மேற்குறிப்பிடப்பட்ட பிரித்தானியர்கள் மட்டுமே தங்கள் ஓட்டுநர் உரிமத்தை பிரான்ஸ் ஓட்டுநர் உரிமமாக மாற்றவேண்டியிருக்குமே தவிர மற்றவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers